விளையாட்டு

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா – ரோஹன் போபண்ணா 2வது சுற்றுக்கு முன்னேற்றம்


அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் ரோஹன் போபண்ணா 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.     நியூயோரிக்கில நடைபெற்று வருகின்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் போது ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் போபண்ணா மற்றும் பாப்லோ ஜோடி அமெரிக்க ஜோடியான பெரேட்லி க்ளான், ஸ்காட் லிப்ஸ்கி ஜோடியை எதிர்கொண்டது. இதில் போபண்ணா ஜோடி 1-6 6-3 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியது.

அதே போல், பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா மற்றும் சீனாவின் சுயாய் பெங் ஜோடி முதல் சுற்றில் குரோஷிய ஜோடியான பெட்ரா மாட்ரிக் மற்றும் டோனா வேகிக்கை எதிர்கொண்டது.  இதில் சானியா மிர்சா ஜோடி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply