இலங்கை பிரதான செய்திகள்

65000 பொருத்து வீடுகளுக்கு எதிராக மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார் சுமந்திரன்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

65000 பொருத்து விடுகளுக்கு எதிரான மனுவை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளார். வடக்கு கிழக்கில் 65000 பொருத்து வீடுகளை அமைப்பது குறித்து  அமைச்சர் சுவாமிநாதனுக்கும் பிரான்ஸ் நிறுவனத்திற்கும் இடையிலான உடன்படிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். உச்ச நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த மனுவையே  சுமந்திரன் வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளார்.

பிரான்ஸ் நிறுவனத்துடன் செய்து கொள்ள உள்ள உடன்படிக்கையில் சில முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தே சுமந்திரன் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
எவ்வாறெனினும் பின்னர் இந்த வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்ள சுமந்திரன் தீர்மானித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது

1 Comment

Click here to post a comment

Leave a Reply

  • பொருத்து வீடுகளுக்கு எதிரான மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டாராம் , கருவாட்டு தோட்ட தலைவர் , அவங்களுக்கு வெட்ட வேண்டிய கமிசன் பெட்டியை அன்றே வெட்டியிருந்தால் வழக்காவது மண்ணாங் கட்டியாவது , ராஜன்.