விளையாட்டு

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில்; வீனஸ் – அனஸ்டசிஜா காலிறுதிக்கு முன்னேற்றம்


நியோர்க்கில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் நான்காவது சுற்றில் வீனஸ் வில்லியம்ஸ் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். அதேவேளை ஷரபோவா   தோல்வியடைந்து வெளியேறியுள்ளார்.

இத்தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற நான்காவது சுற்று போட்டியில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸும், ஸ்பெயினின் கர்லா நவரோவும்  போட்டியிட்டனர். இப்போட்டியில் வீனஸ் வில்லியம்ஸ் 6-3, 3-6, 6-1 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதிப்பெற்றார்.

இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் ரஷியாவின் ஷரபோவாவை எதிர்கொண்ட லடிவியாவின் அனஸ்டசிஜா 5-7, 6-4, 6-2 என்ற செட் கணக்கில்   வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளர்h.

அதேவேளை ஆண்கள் இரட்டையர் பிரிவின் இரண்டாம் சுற்று போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் – பூரவ் ராஜா ஜோடி, ரஷியாவின் கரேன் கச்சனோவ் – அண்ட்ரே ருப்லேவ் ஜோடியை எதிர்கொண்டது. இப்போட்டியில், ரஷிய ஜோடி 6-4, 7-6 என்ற நேர் செட்களில் இந்திய ஜோடியை தோற்கடித்து மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

September 3, 2017 – Anastasija Sevastova in action against Maria Sharapova at the 2017 US Open.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers