விளையாட்டு

பார்முலா கார் பந்தய போட்டியில் லீவிஸ் ஹமில்டன் முதலிடம்


பார்முலா கார் பந்தய போட்டியில்  இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹமில்டன் முதலிடத்தினைப் பெற்றுள்ளார். ஹமில்டன் 1 மணித்தியாலம் 15 நிமிடம் 32.312 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடத்தை பெற்றுள்ளார்.
இந்த ஆண்டுக்கான பார்முலா 1 கார்பந்தயம் உலகம் பூராகவும்  20 சுற்றுகளாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில்  அதன்  பதின்மூன்றாவது  சுற்றான இத்தாலி  கிராண்ட்பிரி போட்டி நேற்றையதினம் நடைபெற்றது.  இதில் 306.72 கிலோ மீற்றர் பந்தய தூரத்தை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 பேர் பங்குபற்றினர்.

இதில் முன்னாள் சம்பியனான இங்கிலாந்தின் லீவிஸ் ஹமில்டன்   1 மணி 15 நிமிடம் 32.312 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடம் பிடித்து அதற்குரிய 25 புள்ளிகளை பெற்றுள்ளார்.  இந்த தொடரில் லீவிஸ் ஹமில்டன்  பெற்ற  ஆறாவது  வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் பதின்மூன்றாவது  சுற்றின்  முடிவில் ஹமில்டன்  238 புள்ளிகளுடன் முதலிடத்திலும், செபஸ்டியன் வெட்டல் 235 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளனர். அடுத்த போட்டி  எதிர்வரும் 17ம் திகதி சிங்கப்பூரில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply