குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையில் அரசாங்க பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக இன்றைய தினம் திறக்கப்பட உள்ளது. கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் இன்றைய தினம் திறக்கப்பட உள்ளன.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி வரையில் மூன்றாம் தவணைக்கான கற்றல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு செய்யும் முதல் கட்ட நடவடிக்கைகள் நடைபெறும் ஐந்து பாடசாலைகள் எதிர்வரும் 21ம் திகதி வரையில் முழுமையாக மூடப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Add Comment