இலங்கை பிரதான செய்திகள்

இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு மேலும் ஒரு கப்பல் வழங்கப்பட்டுள்ளது


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இந்திய கடலோரக் காவல்படையின் ஆழ்கடல் கண்காணிப்பு கப்பலொன்று நேற்று (2017 செப்டம்பர் 05) இலங்கை கடற்படையிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இந்தியாவின் கொச்சி துறைமுகத்தில் நடைபெற்றுள்ளது. குறித்த கப்பல் CG60 எனப் பெயாிடப்பட்டு இலங்கை கடலோரக் காவல்படைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

கப்பலானது இந்திய கடலோரக் காவல்படையின் பணிப்பாளர் நாயகம் வைஸ் அட்மிரல் ராஜேந்திர சிங்கினால்  இலங்கை கடலோரக் காவல்படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் சமந்த விமலதுங்கவிடம் அதிகாரப்பூர்வமாக  கையளிக்கப்பட்டுள்ளது .

இந் நிகழ்வுக்காக இலங்கை கடற்படையின் கடற்படை தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் சிரிமெவன் ரனசிங்க, இந்திய கடலோர காவல்படையின் கூடுதல் பணிப்பாளர் நாயகம், கே நடராஜன், இந்திய தெற்குப் பகுதியின் தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் ஆர்.ஜே நட்கானி ஆகியோரும்,  இந்திய இலங்கை கடற்படைகளின் மற்றும் கடலோரக் காவல்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனா்.

74.10 மீட்டர் நீளம் மற்றும் 11.4 மீட்டர் அகலம் கொன்டுள்ள இக் கப்பல் 22 நொட் உயர் வேகத்தில் பயணிக்கக்கூடியதாக இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சாதாரண சஞ்சரிப்பு நேரத்தில் 16 நொட் வேகத்தில் பயணிக்ககூடி 8.500 கடல் மைல்கள் பயண எல்லையை கொண்டுள்ள இக்கப்பல் இலகு உலங்குவானூர்தி தரையிறங்குவதற்கான இலகுரக  இறங்குதளத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

அத்துடன் இக் கப்பலில் 10 கடற்படை அதிகாரிகள் மற்றும் 98 கடற்படை சிப்பாய்கள் ஒரேநேரத்தில் தங்குவதற்கு மற்றும் பிற வசதிகளையும் கொண்டுள்ளது. இக் கப்பல் 1180 தொன் கொள்ளளவு கொண்டுள்ளது.

இலங்கை கடல் பிராந்திய எல்லைக்குள் ரோந்து நடவடிக்கைகள், தேடுதல் நடவடிக்கைகள், மனிதாபிமான நிவாரண நடவடிக்கைகள், அனர்த்த நிவாரண நடவடிக்கைகள் மற்றும் கடல் பிராந்திய சூழல் மாசடைவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் போன்ற பணிகளில் ஈடுபதுவதுக்காக இலங்கை கடலோர பாதுகாப்பு படை எதிர்பார்க்கப்படுகிறது

குறித்த கப்பல்  எதிர்வரும் 14ம் திகதி இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பயணம் தொடங்க உள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.