விளையாட்டு

அண்டி இந்த பருவ காலத்தில் நடைபெறவுள்ள போட்டிகளில் பங்கேற்க மாட்டார்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நட்சத்திர டென்னிஸ் வீரர் அண்டி மரே உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக டென்னிஸ் தர வரிசையில் இரண்டாம் இடத்தை வகித்து வரும் மரே, இந்த பருவ காலத்தில் நடைபெறவுள்ள ஏனைய போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது. மரே, அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரிலிருந்து இறுதி நேரத்தில் விலகிக்கொண்டிருந்தார்.

ஒக்ரோபர் மாதம் சீனாவில் நடைபெறவுள்ள ஏ.ரீ.பீ போட்டித் தொடரிலும் மாத இறுதியில் வியன்னா மற்றும் பாரிஸில் நடைபெறவுள்ள போட்டித் தொடர்களிலும் மரே பங்கேற்கக்கூடிய சாத்தியமில்லை என தெரிவிக்கப்படுகிறது.

எதிர்காலத்தை கருத்திற் கொண்டு தாம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக நட்சத்திர ஸ்கொட்லாந்து டென்னிஸ் வீரர் மரே தெரிவித்துள்ளார். இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக மரே இந்தப் பருவ காலத்தில் பெரும்பாலும் போட்டிகளில் பங்கேற்கக்கூடிய சாத்தியம் குறைவாக காணப்படுகின்றது என தெரிவிக்கப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply