இலங்கை

2020ம் ஆண்டில் சுதந்திரக் கட்சி தனித்து ஆட்சி அமைக்கும் :


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

எதிர்வரும் 2020ம் ஆண்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணி தனித்து ஆட்சி அமைக்கும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பல நோக்கங்கள் பூர்த்தியாகி உள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் எதிர்வரும் தேர்தல்களின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கை அல்லது வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் எனவும் வேறும் சின்னங்களில் போட்டியிடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2020ம் ஆண்டில் நிச்சயமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து ஆட்சி அமைக்கும் என குறிப்பிட்டுள்ள அவர் யார் கூட்டணி சேராவிட்டாலும் சுதந்திரக் கட்சி தனித்து அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 7 other subscribers