பராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள உத்தேச அரசியல் யாப்பு சம்பந்தமான இடைக்கால வரைபோடு சேர்த்துக் கொள்ளப்படவுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அறிக்கை ஒன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் பல்வேறு கட்சிகளின் நிலைப்பாடு குறித்த தகவல்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வழிநடத்தல் குழுவின் உறுப்பினர்களாகிய இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரின் கையொப்பத்துடன் கடந்த ஓகஸ்ட் மாதம் 29 ம் திகதி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இரா.சம்பந்தனினால் குறித்த அறிக்கை நேரடியாக கையளிக்கப்பட்டுள்ளது
திகதி குறித்த ஆவணமானது மறுதினமான ஓகஸ்ட் 30ம் திகதியே அரசியல்யாப்பு வழிநடத்தல் குழு செயலகத்திற்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love
Add Comment