இலங்கை

சயிட்டம் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் நாட்டில் பீதி நிலவக்கூடிய சாத்தியம் :


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்படாவிட்டால் மீளவும் நாட்டில் பீதி நிலவக்கூடிய சாத்தியம் உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் மாணவர்கள் தொடர்ந்தும் 21ம் நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply