இந்தியா

டெல்லி நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியை இடதுசாரிக் கூட்டணி தோற்கடித்தது:-

டெல்லி ஜவகரலால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் முக்கிய பொறுப்புகளை இடதுசாரி கூட்டணி வெற்றி கொண்டுள்ளது.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் சங்க தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இத்தேர்தலில் இடதுசாரி மாணவர் கூட்டமைப்பு மற்றும் பா.ஜ.க.வின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி. பிரிவினரிடையே கடும் போட்டி நிலவியது.

இந்நிலையில், இந்த தேர்தலுக்கான முடிவுகளில் தலைவர், துணை தலைவர், பொதுச்செயலாளர், இணைச்செயலாளர் ஆகிய முக்கிய பொறுப்புகளை ஒன்றுபட்ட இடதுசாரி கூட்டமைப்பு வென்றுள்ளது. இடதுசாரி கூட்டணியிலிருந்து கீதா குமாரி தலைவராக வென்றுள்ளார்.

காணமல் போன பல்கலைகழக மாணவன் நஜீப் அகமது வழக்கு, மாணவர்களுக்கான புதிய விடுதி ஆகிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என வெற்றி பெற்றுள்ள கீதா குமாரி தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply