குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ரபால் நடால், அமெரிக்க ஓபன் போட்டித் தொடரில் சம்பியன் பட்டம் வென்றுள்ளார். மூன்றாவது தடவையாக அமெரிக்க ஓபன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள நடால், தனது 16ம் கிரான்ட் ஸ்லாம் பட்டத்தை தனதாக்கிக் கொண்டுள்ளார். தென் ஆபிரிக்காவின் கெவின் அன்டர்சனை வீழ்த்தி, நடால் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். நியூயோர்க்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 6-3 6-3 6-4 என்ற நேர் செற்களில் நடால் இலகு வெற்றயீட்டியுள்ளார்.
நடால் இந்த ஆண்டில் இதற்கு முன்னதாக பிரெஞ்சு ஓபன் போட்டித் தொடரிலும் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதி கூடிய கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர்கள் வரிசையில் நடால் இரண்டாம் இடத்தை வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment