Home இலங்கை விவசாயம் செய்ய விரும்புவோருக்கு காணிகள் வழங்கப்படும் – ஜனாதிபதி

விவசாயம் செய்ய விரும்புவோருக்கு காணிகள் வழங்கப்படும் – ஜனாதிபதி

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

விவசாயம் செய்ய விரும்புவோருக்கு காணிகள் வழங்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம் இவ்வாறு காணிகள் வழங்கப்பட உள்ளது.
விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட விரும்பும் நபர்களுக்கு விவசாயம் செய்யப்படாத அரச மற்றும் தனியார் காணிகள் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் உணவு உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கம் இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் போது அரசியல் காரணிகளை கருத்திற் கொள்ளப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More