இலங்கை

ஜனாதிபதி ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் 19ம் திகதி உரையாற்ற உள்ளார்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 19ம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 72ம் பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்க உள்ளார். இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி எதிர்வரும் 16ம் திகதி நியூயோர்க் பயணம் ; செய்ய உள்ளார்.

‘பேண்தகு உலகில் நிலையான சமாதானம், வாழ்க்கைக்கான போராட்டம்’ என்ற தொனிப் பொருளில் இம்முறை மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டில் பங்கேற்கும் ஜனாதிபதி, ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் அன்டனியோ குட்டராஸ் உள்ளிட்டவர்களை சந்திக்க உள்ளார். மூன்றாவது தடவையாக ஜனாதிபதி இம்முறை ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply