குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடக்கு கிழக்கு வாழ் மலையக தமிழ் மக்கள் ஒன்றியத்தின் வடக்கு பிரதிநிதிகள் இன்று திங்கள் கிழமை வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேயை சந்தித்து கலந்துரையாடியுள்ளனா். வடக்கு வாழ் மலையக மக்களின் வாழ்க்கை பிரச்சினைகள், அபிவிருத்தி தேவைப்பாடுகள், நெருக்கடிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேயுடன் கலந்தரையாடியுள்ளனா்.
அத்தோடு கிளிநொச்சி சேவை சந்தையின் புதிய கட்டடம் தொடர்பிலும், முல்லைத்தீவு முள்ளியவளை நாவற்காடு கிராம மக்கள் மீது காட்டப்படுகின்ற பாரபட்சங்கள் தொடர்பிலும் ஆளுநரின் கவனத்திற்குகொண்டுவந்துள்ளனர். இச் சந்திப்பில் வடக்கு கிழக்கு வாழ் மலையக தமிழ் மக்கள் ஒன்றியத்தின் வடக்கு இணைப்பாளர்கள் கலந்துகொண்டனா்
Add Comment