ஜெர்மனியில் உள்ள பிராங்பர்ட் விமான நிலையத்தில் இன்று இந்தெரியாத நபர் ஒருவர் ஒருவித கண்ணீர்புகையை விசிறி தாக்கியதில் அங்கிருந்த பயணிகள் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானநிலையத்தின் முதல் ரேமினலில் பயணிகளை அனுமதிக்கும் பகுதியில் பயணிகள் வரிசையாக நின்று கொண்டிருந்த வேளை குறித்த நபர் திடீரென ஒருவித வாயுவை திடீரென விசிறியுள்ளார்.
இதனால் அந்த இடத்தில் நின்றிருந்த பயணிகளுக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இது ஒரு தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, உடனடியாக அங்கிருந்த பாதுகாவலர்கள் அப்பகுதி முழுவதும் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
எனினும் ஆபத்து விளைவிக்கக்கூடிய எந்த பொருளும் சிக்கவில்லை எனவும் இது கண்ணீர் புகை தாக்குதலாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் 6 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
Add Comment