குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.
முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவின் செயற்பாடுகளினால் மூன்று லட்சம் படைவீரர்கள் ஆபத்தில் சிக்கியுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பிவித்துரு ஹெல உறுமய கட்சியினால் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். படைவீரர்களை காப்பாற்ற வேண்டுமாயின் சரத் பொன்சேகா ஓர் மனநோயாளி என்று வெளி உலகிற்கு காண்பிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பதவி வகித்த இராணுவத் தளபதியே தமது படை அதிகாரிகள் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தினால் வேறும் சாட்சியங்கள் தேவைப்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த எட்டு ஆண்டுகளாக சாட்சியங்கள் எதுவுமின்றி இருந்த தமிழ் பிரிவினைவாதிகளுக்கு பொன்சேகாவின் கருத்து பெரும் மகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Add Comment