இலங்கை பிரதான செய்திகள்

சைட்டத்திற்கு எதிரான வாகன தொடரணி கிளிநொச்சியை வந்தடைந்தது


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சைட்டத்திற்கு எதிரான போராட்டம் இன்று கிளிநொச்சியை வந்தடைந்துள்ளனர்..  இன்று நண்பகல் கிளிநொச்சியை வந்தடைந்த சைட்டத்திற்கு எதிரான   வாகன தொடரணியினர் கிளிநொச்சி பொதுச்சந்தை முன்பாக மக்களை தெளிவூட்டும் செயற்பாட்டில் ஈடுபட்டனர்.

இங்கு   கருத்து தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற  உறுப்பினர் இராமலிங்கம்சந்திரசேகர் கருத்து தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டம் வறுமையில் 3ம் இடத்தில் உள்ளது, முல்லைத்தீவு மாவட்டம் வறுமை மாவட்டத்தில் முதலாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் இங்கிருந்து யாராயினும் 100 லட்சம் கொடுத்து கல்வி கற்று வைத்தியராக முடியுமா என குறிப்பிட்டார்

அதனைத் தொடர்ந்து முருகண்டியை  சென்றடைந்த  வாகனப் பேரணி நாளை காலை வவுனியாவை நோக்கி தனது பயணத்தை ஆரம்பிக்க உள்ளது

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers