குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காணாமல் போனோர் அலுவலகத்தை இயக்குவது குறித்த ஆவணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்டுள்ளார். தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி இந்த ஆவணத்தில் கையொப்பமிட்டுள்ளார்.
எதிர்வரும் 15ம் திகதி முதல் இந்த அலுவலகம் இயங்கும் வகையில் வர்த்தமானி அறிவித்தலில் கையொப்பமிடப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களின் உறவினர்களுடன் அண்மையில் ஜனாதிபதி நடத்திய சந்திப்பினைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Spread the love
Add Comment