இலங்கை புலம்பெயர்ந்தோர்

நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் மேன்முறையீடு

தமிழீழ விடுதலைப் புலிகள், மேன்முறையீட்டு நீதிமன்றம், விடுதலைப்புலி உறுப்பினர், பயங்கரவாத விசாரணைப் பிரிவு, அநுராதபுரம், அன்டனோவ்-32 விமானம்

நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவரால், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

விடுதலைப்புலி உறுப்பினர், பயங்கரவாத விசாரணைப் பிரிவில் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலம் சட்டரீதியானதென, அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமன் வழங்கிய கட்டளையை சவாலுக்கு உட்படுத்தியே, இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புலிகள் அமைப்பின் எறிகணைப் படையணியின் முக்கியமானவரான புவலன் என்றழைக்கப்படும் இராசதுரை ஜெகன் சார்பிலேயே இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2000ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி, பலாலியிலிருந்து இரத்மலானைக்குப் சென்று கொண்டிருந்த அன்டனோவ்-32 விமானம் வில்பத்துவ சரணாலயத்தில் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் எறிகணை தாக்குதலில் சுட்டுவீழ்த்தப்பட்டதில் ரஷ்ய விமானி மற்றும் பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 31 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் எறிகணைப் படையணியின் முன்னாள் உறுப்பினர்களான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இராசதுரை ஜெகன் மற்றும் நல்லாம் சிவலிங்கம் ஆகிய இருவருக்கு எதிராகவே குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில், அதிகுற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த இருவரும், இம்மாதம் 25ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply