இந்தியா பிரதான செய்திகள்

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதனை ரத்து செய்ய கோரி திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு


குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டதை ரத்து செய்ய கோரி  மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் தொடர்ந்த வழக்கு எதிர்வரும்  19 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திருமுருகன் காந்தி மெரினாவில்; கடந்த மே மாதம் இலங்கையில்   நடைபெற்ற இனப் படுகொலையை கண்டித்து நினைவேந்தல் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியிருந்தார்.     காவல்துறை அனுமதியின்றி நிகழ்ச்சியை நடத்தியதாக கைது செய்யப்பட்ட   திருமுருகன் காந்தி, உள்ளிடோர் பின்னர்   குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்ய கோரி திருமுருகன் காந்தி உள்பட நான்கு பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்று   இறுதி விசாரணைக்கு வந்த நிலையிலேயே வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.