இலங்கை

லலித் மற்றும் அனுசவின் பிணை கோரல் மனு இன்று விசாரணைக்கு


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணையகத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுச பெல்பிட்ட ஆகியோரின் பிணை கோரல் மனு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. 600 மில்லியன் ரூபா பெறுமதியான சில் ஆடைகளை சட்டவிரோதமான முறையில் அரச பணத்தைக் கொண்டு விநியோகம் செய்ததாக இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் இருவருக்கும் மூன்றாண்டு கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது வெலிக்கடைச் சிறையில் இந்த இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ள  நிலையில் இருவருக்கும் பிணை வழங்குமாறு கோரி கொழும்பு உயர் நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பிணை கோரல் மன்று இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply