கருக்கலைப்பு குறித்து, மதத் தலைவர்களுக்கு மருத்துவர்கள் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கொழும்பு ஸ்ரீ சங்கபோதி விஹாரையில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
பௌத்த மாநாயக்க தேரர்கள், கார்தினால் மெல்கம் ரஞ்சித், ஜமயத்துல் உலமா சபையின் உறுப்பினர்கள், இந்து மத குருமார் ஏனைய மதத் தலைவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
12 முதல் 16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற் உட்பட்டதன் காரணமாக தரிக்கும் கருக்கள் மற்றும், பாரியளவில் விஹாரமடைந்த கருக்கள் தொடர்பிலேயே இவ்வாறு கருக் கலைப்பிற்கு அனுமதி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதிலும் குறிப்பாக நீதவானின் உத்தரவிற்கு அமையவே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.
Spread the love
Add Comment