குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
‘சமதளத்தில் ஒன்றாக’ எனும் தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்ட மாகாண மட்ட வணிக கண்காட்சியும், தொழில் சந்தையும் இன்று கிளிநொச்சியில் வடமாகாண முதலமைச்சரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த கண்காட்சி இன்று கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட குறித்த கண்காட்சி கூடம் காலை 9.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது, குறித்த கண்காட்சியில் மாற்றுதிறனாளிகள் கையிட்டு செய்த பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன், விற்பனையும் செய்யப்பட்டமை குறிப்பிடதக்கது. குறித்த நிகழ்வில் முதலமைச்சர், அமைச்சர் அனந்தி சசிதரன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தனர். குறித்த கண்காட்சி நாளையும் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love
Add Comment