இந்தியா பிரதான செய்திகள்

இணைப்பு 02- தகுதிநீக்கம் செய்தமை தொடர்பில் தினகரன் ஆதரவாளர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு


18 சட்டமன்ற உறுப்பினர்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்துள்ளமையினை எதிர்த்து தினகரன் ஆதரவாளர்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்  செய்யப்பட்டுள்ளது.

தகுதிநீக்கம் செய்தமை சட்டவிரோதம் எனத் தெரிவித்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

டிடிவி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள்  18 பேரை தகுதி நீக்கம்:-

Sep 18, 2017 @ 03:59
சபாநாயகரின் கடிதத்திற்கு விளக்கம் அளிக்காத டிடிவி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார்.

அதிமுகவின் இணைப்பு நிகழ்ச்சிக்கு பின் முதல்வருக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றுக் கொள்வதாக தினகரன் சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து கடந்த ஓகஸ்ட் 21-ஆம் திகதி கடிதம் கொடுத்தனர்.

இதைத் தொடர்ந்து தனது கவனத்துக்கு வராமல் நேரடியாக 19 பேரும் ஆளுநரை சந்தித்ததாக கொறடா ராஜேந்திரன் அளித்த முறைப்பாட்டின் பேரில் சபாநாயகர் தனபால் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பினார்.

இந்நிலையில் தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் எடப்பாடி அணியில் இணைந்தார். இதைத் தொடர்ந்து மீதமுள்ள 18 சட்டமன்ற உறுப்பினர்களும் நேரடியாக விளக்கம் அளிக்க கால அவகாசம் வழங்கப்பட்டும் அவர்கள் சபாநாயகரை சந்திக்காமல் கூர்க் விடுதியில் தங்கியிருந்தனர்.

இதனிடையே, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் ஆளுநரிடமும், நீதிமன்றத்திடமும் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் கடந்த 12-ஆம்  திகதி அதிமுக பொதுக் குழு கூடி சசிகலாவுக்கும், தினகரனுக்கும் எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றியது.

இதனால் ஆட்சியை கவிழ்க்க தினகரன் தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்யக் கூடும் என்று எதிர்பார்த்த வேளையில்   இவ்வாறு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இந்திய அரசியலமைப்பு அட்டவணை 10-இன் படி தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers