ஐதராபாத்தில் தனவந்தர்களுக்கு சிறுமிகளை விற்கும் ஒரு குழுவை கைது செய்த காவல்துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத்தில் ஒரு குழு சில வீடுகளை வாடகைக்கு எடுத்து விடுதிகள் போல செயல்பட்டு வருவதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலினை தொடர்ந்து காவல்துறையினர் ஐதராபாத் முழுவதும் கடந்த சில தினங்களாக தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஓமான் மற்றும் கத்தார் நாட்டு தனவந்தர்களுக்கு சிறுமிகள் விற்கப்பட்டு வருகின்றமை தொடர்பாக சிறுமிகளின் தாயார் மற்றும் உறவினர்கள் தொடர்ந்து காவல்துறையில் முறைப்பாடுகள் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love
Add Comment