இலக்கியம் இலங்கை பிரதான செய்திகள்

BORDER எல்லை குறுந்திரைப்படம் இரண்டு திரைப்பட விழாக்களில் சிறந்த குறுந்திரைப்படத்துக்கான “பார்வையாளர்” விருதைப் (Audience Award) பெற்றுள்ளது:-

தாய் பிக்சர்ஸ் பாஸ்கரன் பார்த்திபனின் கதை தயாரிப்பில் சமிதனின் இயக்கத்தில் உருவான… BORDER  எல்லை குறுந்திரைப்படம் இரண்டு திரைப்பட விழாக்களில் சிறந்த குறுந்திரைப்படத்துக்கான “பார்வையாளர்” விருதைப் (Audience Award) பெற்றுள்ளது.

1. லண்டன் விம்பம் திரைப்பட விழா
2. யாழ்ப்பாணம் சர்வதேச திரைப்பட விழா

ஆனால் சிறந்த குறுந்திரைப்படத்துக்கான “நடுவர்கள்” விருது (Jury Award) இரண்டு திரைப்பட விழாக்களிலும் கிடைக்கவில்லை. அதே நேரம் கோவா திரைப்பட விழாவுக்கு இக்குறுந்திரைப்படம் உத்தியோகபூர்வமாக தெரிவாகி உள்ளது.  எமது படைப்புகள் தங்கள் பிரச்சினைகளை பேச வேண்டும் என, எமது மக்கள்  எதிர்பார்க்கிறார்கள். அதை தெளிவாகவும் நேரடியாகவும் பேசும் போது அந்த படைப்புகளை அவர்கள் வரவேற்கிறார்கள். ஆதரிக்கிறார்கள். அந்த வகையில், எமது படைப்புகள் முதலில் எமது மக்களுக்கானதாக இருக்க வேண்டியுள்ளது. அவ்வாறு எமது மக்களுக்காக உருவாக்கப்படும் படைப்புகள் அடுத்தடுத்து சர்வதேச திரைப்பட விழாக்களை ஆக்கிரமிக்கும் போது எமது படைப்புகள் தமக்கான தனித்துவத்தின் ஊடாக சர்வதேசரீதியாக பார்ப்போரை சென்றடையும். மாறாக சர்வதேச திரைப்பட விழா நியமங்களை மனதில் நிறுத்தி செய்யப்படும் படைப்புகள் ஊடாக எமது தனித்துவத்தை வளர்க்க முடியாது. அத்தகைய தனித்துவம் எதுவும் இல்லாத பட்சத்தில் எமது படைப்புகள் சர்வதேச பார்வையாளருக்கு வேண்டாப் பொருளாகிவிடும். அல்லது மலிவு பொருளாகி விடும். எனவே, எமது கதைகளை, எமது மக்களுக்காகப் படைப்போம். அந்த படைப்புகள் சர்வதேச பார்வையாளர்களுக்கு ஒரு புதிய சினிமாவை காட்டட்டும்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.