உலகம் பிரதான செய்திகள்

இமானுவல் மகரோனின் புதிய தொழிலாளர் சீர்திருத்தங்களை எதிர்த்து இடதுசாரி கட்சிகள் தொடர் போராட்டம்..

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மகரோனின் புதிய தொழிலாளர் சீர்திருத்தங்களை எதிர்த்து இடதுசாரி கட்சிகள் தொடர் போராட்டம் மேற்கொண்டு வருவதனால் ஜனாதிபதி எதிர்ப்புகளை எதிர்நோக்கி வருகின்றார்.

ஜனாதிபதி மக்ரோனின் அரசு பிரான்சில் தொழில் நிறுவனங்கள் தொழிலாளர்களை வேலைக்கு சேர்ப்பது மற்றும் நீக்குவதை எளிமைப்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்திய புதிய சட்டங்களை அடுத்தாண்டிலிருந்து அமுப்படுத்தப் போவதாக அறிவித்திருந்தது. இந்த சட்டத்திற்கு இடதுசாரி கட்சிகள் மத்தியில் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அக்கட்சிகள் ஒன்றினைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்தநிலையில் நேற்று, பாரீஸ் நகரில் பாரிய பேரணியை அவர்கள் நடத்தியுள்ளனர்.

தேர்தலில் தன்னை வலதுசாரி, இடதுசாரி இரண்டிற்கும் பொதுவானவராக சொல்லி வந்த மக்ரோன் இப்போது வலதுசாரியாக மாறிவிட்டார் என எதிர்ப்புப் பேரணியில் கலந்து கொண்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். எனினும் போராட்டங்களை கண்டு தமது முடிவிலிருந்து பின் வாங்கப்போவதில்லை என மக்ரோன் அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனால், தொழிலாளர்கள் மத்தியில் ஜனாதிபதி மக்ரோனுக்கு இருந்த செல்வாக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.