ஊபர் (Uber ) தனியார் வாடகைக் கார் நிறுவன ஒப்பந்தக்காரர்களும் தொழிற்சங்கத்தினரும் இன்றையதினம் லண்டனில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
ஊபர் நிறுவனம் வாகனங்களை தொடர்ந்து இயக்குவதற்கான உரிமம் புதுப்பிக்கப்பட மாட்டாது என லண்டன் போக்குவரத்துக்குப் பொறுப்பான டி.எல்.எஃப் ( DLF ) தெரிவித்திருந்த நிலையில் தொழிலாளர்களுக்கான அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி மேற்படி பேரண மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த பயண நிறுவனம், தனியார் வாகன சேவையை நடத்த தகுதியற்றது என டிஎல்எஃப் தெரிவித்துள்ளதுடன் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் அதுதொடர்பான விளைவுகளைக் கவனத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தது.
அதிக நெரிசல் உருவாக்குதல், பாலியல் குற்றங்கள் குறித்த புகார்களை சமர்பிக்க தவறுதல், ஓட்டுநர்கள் மீதுள்ள புகார்களை சரிவர விசாரிக்காமல் விடுதல் மற்றும் அதன் வாகனங்களினால் அதிகரித்து வரும் விபத்துகள் ஆகியன ஊபர் மீதான குற்றச்சாட்டுக்களாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
லண்டன் நகரில் சுமார் 35 லட்சம் மக்களும் 40 ஆயிரம் வாகன சாரதிகளும் ஊபர் செயலியை பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Add Comment