இலங்கை பிரதான செய்திகள்

வடகொரியர்கள் மீது கடுமையான வீசா கட்டுப்பாடுகளை விதிக்கும் இலங்கை


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வடகொரிய பிரஜைகள் மீது இலங்கை அரசாங்கம் கடுமையான வீசா கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்துள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையின் தீர்மானத்திற்கு அமைய இந்த வீசா கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட உள்ளன. வடகொரியா அணுவாயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் தயாரித்து வருவதனால் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவை சில தடைகளை விதித்துள்ளது.

இலங்கைக்குள் பிரவேசிக்கும் வடகொரிய பிரஜைகள் தொடர்பில் கடுமையான வீசா நடைமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இணைய முறையின் ஊடாக வடகொரிய பிரஜைகள் இலங்கை வீசா பெற்றுக்கொள்ள வாய்ப்பு கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap