Home இந்தியா திருமுருகன் காந்தி மீண்டும் கைது :

திருமுருகன் காந்தி மீண்டும் கைது :

by admin

மே 17 அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி இன்றையதினம் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.  இலங்கை தூதரகம் முன்பாக நடைபெற்ற போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கச் சென்ற நிலையில் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜெனிவாவில்உரையாற்றிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சில பெரும்பான்மையினத்தவர்  தாக்க முயன்றதனை கண்டித்தும், இலங்கை அரசை இந்திய அரசு கண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் முன்பு ம.தி.மு.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப்  போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க சென்றுள்ள நிலையில் அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரை  கைது செய்துள்ளனர் உள தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More