உலகம் பிரதான செய்திகள்

இணைப்பு 2 – பிரான்ஸ் நிலக்கீழ் புகையிரத நிலைய தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினர் பொறுப்பு

தென் பிரான்ஸ் பகுதியில் உள்ள மார்செய்ல்  (Marseille   ) நகரில் உள்ள செயின்ட் சார்ள்ஸ் (Saint Charles) நிலக்கீழ் புகையிரத நிலயத்தில் நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு  ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.   இனந்தெரியாத நபர் ஒருவர் மேற்கொண்ட இந்த தாக்குதலில்    தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன்  மேலும் பலர் காயமடைந்திருந்தனர்.   அதேவேளை தாக்குதலாளியும்  காவல்துறையினர் சுட்டுக் கொன்றுள்ளனர் என்பது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரான்சில் புகையிரத நிலையத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

Oct 1, 2017 @ 14:03
தென் பிரான்ஸ் பகுதியில் உள்ள மார்செய்ல்  (Marseille   ) நகரில் உள்ள செயின்ட் சார்ள்ஸ் (Saint Charles ) நிலக்கீழ் புகையிரத நிலயத்தில் இன்று  இனந்தெரியாத நபர் ஒருவர் கத்தியால் குத்தி மேற்கொண்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் குறித்த பிரதேசத்துக்கு சென்ற காவல்துறையினர் தாக்குதலாளியை சுட்டுக் கொன்றுள்ளனர்.  தாக்குதல் நடத்திய நபர்  குறித்த தகவல்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை.   குறித்த பகுதிக்கு  பொதுமக்கள் செல்வதனை  தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap