Home விளையாட்டு மலேசியாவில் நடைபெற்ற பார்முலா1 கார்பந்தயத்தில் நெதர்லாந்து வீரர் மக்ஸ் வெர்ஸ்டப்பென் முதலிடம் பிடித்துள்ளார்.

மலேசியாவில் நடைபெற்ற பார்முலா1 கார்பந்தயத்தில் நெதர்லாந்து வீரர் மக்ஸ் வெர்ஸ்டப்பென் முதலிடம் பிடித்துள்ளார்.

by admin

மலேசியாவில் நடைபெற்ற பார்முலா1 கார்பந்தயத்தில் நெதர்லாந்து வீரர் மக்ஸ் வெர்ஸ்டப்பென் (  Max Verstappen)  முதலிடம் பிடித்துள்ளார். இந்த ஆண்டுக்கான பார்முலா 1 கார்பந்தயம் உலகம் பூராகவும்  20 சுற்றுகளாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில  15-வது சுற்றான மலேசிய கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம் கோலாலம்பூரில் உள்ள செபாங் ஓடுதளத்தில் நேற்று நடைபெற்றது.

பந்தய தூரமான 310.408 கிலோமீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 19 வீரர்கள்  போட்டியிட்ட நிலையில  நெதர்லாந்து வீரர் மக்ஸ் வெர்ஸ்டப்பென் ( Max Verstappen)    1 மணி 30 நிமிடங்கள் 01.290 வினாடிகளில் இலக்கை அடைந்து முதலிடம் பிடித்துடன் அதற்கான 25 புள்ளிகளையும் பெற்றுள்ளார்.  இந்த காலப்பகுதியில்  அவர் பெற்ற முதல் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தின் லீவிஸ் ஹமில்டன் 2-வதாக வந்து 18 புள்ளிகளையும், அவுஸ்திரேலியாவின் டானியல் ரிக்கார்டோ 3-வதாக வந்து 15 புள்ளிகளும் பெற்றுள்ளனர்.

இதுவரை நடந்துள்ள 15 சுற்றுகள் முடிவில் சம்பியன்  கிண்ணத்திற்கான  வாய்ப்பில் ஹமில்டன் 281 புள்ளிகளுடன் முதலிடத்திலும், செபஸ்டியன் வெட்டல் 247 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், வால்டெரி போட்டாஸ் 222 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் இருக்கிறார்கள்.  அடுத்த சுற்று போட்டி ஜப்பானில் எதிர்வரும் 8ம் திகதி நடைபெறவுள்ளது.

Albert Park, Melbourne, Australia.
Thursday 23 March 2017.
Max Verstappen, Red Bull.
World Copyright: Andrew Hone/LAT Images
Ref: Digital Image _ONZ0177

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More