குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
2018ம் ஆண்டு கால்பந்தாட்ட உலகக் கிண்ண போட்டிகளுக்கான ஆயத்தங்கள் தொடர்பில் திருப்தி அடைவதாக ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். கால்பந்தாட்ட உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறவுள்ள மைதானங்கள் ஆயத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும் சில மைதானங்களில் இன்னமும் பணிகள் பூர்த்தியாகவில்லை எனவும் சிறு தாமதம் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.இந்த தாமதங்கள் மோசமான தாமதங்கள் அல்ல எனவும், ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் இறுதி நேரத்தில் அதனை தீர்க்க காத்திருக்கக் கூடாது எனவும் புட்டின் தெரிவித்துள்ளார். விளையாட்டுத்துறை அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love
Add Comment