இலங்கை பிரதான செய்திகள்

புதுக்குடியிருப்பில் சட்டவிரோதமாக துப்பாக்கி தயாரித்தவர் கைது


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் சட்டவிரோத முறையில் கட்டுத் துப்பாக்கிகள் தயாரித்த வீட்டு உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெலிகன்ன அவர்களின் வழிநடத்தலில் விரைந்த புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொலிஸ் அணியினர் தேவிபுரம் பகுதியில் சட்டவிரோத முறையில் கட்டுத் துப்பாக்கிகள் தயாரித்த வீட்டை முற்றுகையிட்டு வீட்டு உரிமையாளரை கைது செய்துள்ளதோடு ஏனையவர்களை தேடிவருகின்றனர்.

இதன்போது குறித்த வீட்டிலிருந்து பொலிஸார் கட்டுத்துவக்கு 19 முழுதாக தயாரிக்கப்பட்ட துவக்கு 3 வெடிமருந்து 1 கிலோ கிராம் துப்பாக்கி குண்டுகள் 2000 மற்றும் துப்பாக்கி தயாரிக்கும் உபகரணங்கள் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர்.
மேலதிக விசாரணை நடத்திவரும் புதுக்குடியிருப்பு பொலிஸார் ஏனையவர்களை தேடிவருவதோடுஇ கைது செய்யப்பட்டவரை நாளை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர்

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.