இந்தியா பிரதான செய்திகள்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் மனு அளிக்க அனுமதிக்க வேண்டும்:-

உச்ச நீதிமன்ற  தலைமை நீதிபதியிடம் மனு அளிக்க அனுமதிக்க வேண்டும் என டெல்லி மாநகர காவல்துறை இணை ஆணையாளர் அஜய் சவுத்ரியை நேரில் சந்தித்து தமிழக விவசாயிகள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் நேற்று 81-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் உச்ச நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்து போராட முயன்ற அவர்களை   கைது செய்த காவல்துறையினர்  இரவில் விடுவித்திருந்தனர்.
இந்தநிலையில் போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணு உள்பட 4 விவசாயிகள் நேற்று காலை டெல்லி மாநகர இணை ஆணையாளர் அஜய் சவுத்ரியை நேரில் சந்தித்து குறித்த மனுவை கையளித்துள்ளனர்

அரசியல் அமைப்பு சட்டப்படி, பிரதமர் மக்களை சந்தித்து குறைகளை கேட்க வேண்டும்  என்கின்ற போதிலும  பிரதமர் மோடி தமிழக விவசாயிகளை சந்திக்க மறுக்கிறார். இதன்மூலம் தனது கடமையை அவர் செய்யவில்லை. எனவே, தங்களது கோரிக்கைகளை பரிசீலிக்க பிரதமருக்கு அறிவுறுத்தும்படி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் மனு அளிக்க விரும்புவதாகவும், அதற்காக உச்ச நீதிமன்றத்திற்கு செல்ல தங்களை அனுமதிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில்  தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.