ஒக்டோபர் மாதம் 04ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய விளையாட்டு சங்கத்தின் நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் பங்குபற்றுவதற்காக வருகைதந்துள்ள பிரதிநிதிகள் நேற்று ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தனர். அடுத்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழா ஏற்பாடுகளை திட்டமிடுவதற்காக நிறைவேற்றுக் குழு இலங்கையில் ஒன்றுகூடுகிறது.
பொதுநலவாய விளையாட்டு விழா தீப்பந்தம் எதிர்வரும் 12ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை இலங்கையில் வைக்கப்படவுள்ளதுடன், இத்தீப்பந்தத்தை இம்மாதம் 12ஆம் திகதி ஜனாதிபதி அவர்களுக்கு கையளிப்பது தொடர்பாக உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்காக இப்பிரதிநிதிகள் ஜனாதிபதி அவர்களை சந்தித்தனர்.
இந்நிகழ்வில் பொதுநலவாய விளையாட்டு சங்கத்தின் தலைவர், பொதுநலவாய விளையாட்டு நிறுவனங்களின் ஒன்றிணைந்த சங்கத்தின் ஆசிய வலய உப தலைவர், தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் கலந்துகொண்டனர்.
Add Comment