குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இலங்கை வந்துள்ள பிரித்தானிய ஆசிய மற்றும் பசுபிக் விவகார அமைச்சர் மார்க் பீல்ட் வடக்கில் பரித்தானியாவின் நிதி உதவியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்ணி வெடி அகற்றும் பணியினையும் நேரில் சென்று பார்வையிடுவதற்காக இன்று (06) பிற்பகல் முகமாலை பகுதிக்கும் சென்றுள்ளார்.
முகமாலை பிரதேசத்தில் கண்ணி வெடி அகற்றும் நிறுவனமான ஹரோ ட்ரஸ்ட நிறுவனத்தினரை சந்தித்தோடு, முகமாலை பிரதேசத்தில் மீள்குடியேறியுள்ள மக்களையும் சந்தித்துள்ளார்.
தனது பயணத்தின் போது எதிர் கட்சி தலைவா் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்களை சந்தித்துள்ள அவா் வடக்கு மற்றும் தெற்கில் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்களையும் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love
Add Comment