இலங்கை பிரதான செய்திகள்

அலுவலகத்திற்குச் சென்று ஊழியரை தாக்கிய பெண் – கடமை நேரத்தில் சம்பவம்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி நகரில் உள்ள உள்ளுராட்சி  அலுவலகம் ஒன்றில்  நேற்று(05) பிற்பகல்  இரண்டு மணியளவில்   அலுவலகத்திற்குச் சென்ற  பெண் ஒருவா் அங்கிருந்து ஊழியர் ஒருவரை தாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது

போலி முகநூல் ஒன்றில் குறித்த பெண்  கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் இராணுவத்திற்கும் இடையில்  தகவல்களை பரிமாறுவதாக    பதிவேற்றி   அதில் இந்த பெண்  இராணுவ முகாம் ஒன்றின் வாயிலில்  நிற்கும் படத்தினை பதிவேற்றியது தொடர்பில் ஆத்திரமடைந்த பெண்னே ஊழியரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் குறித்த பெண்னை தொடர்பு கொண்டு வினவிய போது  தான் தனது காணி விடயம் தொடர்பில் இராணுவ சிவில் முகாமுக்கு காணி ஆவணத்தை வழங்க சென்ற போது  உதவிக்கு குறித்த ஊழியரை  தன்னுடன் வருமாறு அழைத்த போது அவா் தான் இராணுவ முகாமுக்கு வரவில்லை என்றும் சற்று தொலைவில்  நிற்பதாகவும் தன்னை சென்று ஆவணத்தை வழங்குமாறு கூறினார் என தெரிவித்துள்ளார்.

இதன் போது தான் இராணுவ முகாம் வாயிலில் நின்று காணி ஆவணத்தை வழங்கிய போது  அவா் பின் பக்கமாக நின்று  தன்னை புகைப்படம் எடுத்துள்ளாh். இரண்டு மாத்திற்கு முன்னர் குறித்த சம்பவம் இடம்பெ;றதாகவும் ஆனால் நேற்று முன்தினம்  முகநூல் கணக்கொன்றில்  ; குறித்த படத்தை பதிவேற்றி தன்னைப் பற்றி தவறான கருத்துக்களையும் பதிவேற்றியுள்ளாh்.இது தொடர்பில்  குறித்த அலுவலக அதிகாரியிடம் முறையிட சென்ற போது அந்த ஊழியருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது தான் தன்னை பாதுகாக்க தாக்கினேன் என்றார்.

இது தொடர்பில் குறித்த ஊழியர் கடமை நேரத்தில் தன்னை அலுவலகத்தில் நுழைந்து தாக்கியது தொடர்பில்  கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.