குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தேர்தல் ஆணைக்குழுவிற்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். சபரகமுவ, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்களை கால தாமதமின்றி நடத்துமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசியல் சாசனத்தின் 78ம் சரத்தின் அடிப்படையில் இவ்வாறு தேர்தலை காலம் தாழ்த்த முடியாது என அவர் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்வதன் மூலம் தேர்தல்களை நடத்துமாறு வலியுறுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love
Add Comment