இலங்கை பிரதான செய்திகள்

கிளிநொச்சி மாவட்டத்தின் உயரதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி மாவட்டத்தில் கடமையாற்றிய பல உயரதிகாரிகளுக்கு பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் இடமாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஜனவரி மாதம்  அமுலுக்கு வரும் வகையில் இந்த  இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி   மாவட்ட மேலதிக அரச அதிபா்  சத்தியசீலனுக்கு ஊர்காவற்றுரை பிரதேசத்தின் பிரதேச செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு. மாவட்டச் செயலக திட்டப்பணிப்பாளர் , கணக்காளர்  மற்றும் கரைச்சி பிரதேச செயலக கணக்காளளர் ஆகியோர் மாகாண சபைக்கும் இடமாற்றம்  செய்யப்பட்டுள்ளனா். பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த இடமாற்றங்கள் வருடாந்த இடமாற்றம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers