குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐம்பது வயது வரையில் விளையாட விரும்புவதாக பிரபல அவுஸ்திரேலிய கிரிக்கட் வீரர் பிரட் ஹொக் தெரிவித்துள்ளார். 46 வயதான ஹொக், சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டாலும், உள்ளுர் மற்றும் கழக மட்டப் போட்டிகளில் பங்கேற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பேஸ் டுவன்ரி20 போட்டித் தொடரில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் (Melbourne Renegades ) அணியின் சார்பில் மீளவும் ஓராண்டுக்காக ஹொக் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தம்மால் முடிந்தளவு போட்டிகளில் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்த விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். தம்மை பற்றி யார் என்ன விமர்சனம் செய்தாலும் அதனை பொருட்படுத்தப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love
Add Comment