குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் நிபுணர்களது அறிவுரைகளை அமுல்படுத்த வேண்டிய கட்டாயமில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சினால் இந்த விடயம் தெரிவித்துள்ளது. காலமாறு நீதிப்பொறிமுறைமை குறித்த ஐக்கிய நாடுகள் விசேட பிரதிநிதி பப்லோ டி கிரீஃப் ( Pablo de Greiff ) இன் பயணம் தொடர்பில் இது தொடர்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நிபுணத்துவ ஆலோசனைப் பெற்றுக்கொண்டு அவற்றை கொள்கை ரீதியில் அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற போதிலும், பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்ற கடப்பாடு கிடையாது என தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் விசேட நிபுணரின் இலங்கை பயணம் தொடர்பில் ஊடகங்களில் பிழையான செய்திகள் வெளியிடப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.
Spread the love
Add Comment