இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் இன்று காலை சந்தித்துள்ளார். ;. இந்தியத் தலைநகர் டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வந்த நிலையில் நேற்று மாலை டெல்லி புறப்பட்டு சென்ற ஓ.பன்னீர் செல்வம் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தின் மின் தேவை தொடர்பான கோரிக்கை மனுவை பன்னீர் செல்வம் அளித்ததாக கூறப்படுகிறது.
ஓ.பன்னீர்செல்வத்துடன் டெல்லி சென்றுள்ள தமிழக அமைச்சர் தங்கமணி, அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன், முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி உள்ளிட்டவர்கள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் சென்றபோதும் துணை முதல்வருக்கும் பிரதமருக்கும் இடையில் மாத்திரம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.
Add Comment