இந்தியா பிரதான செய்திகள்

நவம்பர் 9இல் இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல்

எதிர்வரும் நவம்பர் மாதம் 9ஆம் திகதி இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல்கள் ஒரே கட்டத்தில் நடைபெறவுள்ளதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையாளர் அச்சல்குமார் ஜோதி அறிவித்துள்ளார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வாக்களிக்கப் பயன்படுத்தப்படும் என்றும் வாக்காளர்கள் தாங்கள் எந்த வேட்பாளருக்கு அல்லது சின்னத்துக்கு வாக்களித்தனர் என்பதைக் காட்டும் காகித அடையாளம் கூடுதல் வசதியாக அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமு லுக்கு வருகின்றன. இமாச்சலில் மொத்தம் 7,521 வாக்குச்சாவடிகளில் 20,000 புதிய வாக்காளர்களுடன் மொத்தம் 49,05 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளதாகவும் இந்த முறை பெண்கள் மட்டுமே நிர்வகிக்கும் 136 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையாளர் கூறியுள்ளார்.

68 உறுப்பினர்கள் கொண்ட இமாச்சல மாநிலத்தின் சட்டப்பேரவையின் பதவிக்காலம் ஜனவரி 7, 2018உடன் முடிவுக்கு வருகிறது. இதேவேளை இந்த தேர்தலின் வாக்கு எண்ணும் பணி எதிர்வரும் டிசம்பர் 18,2017இல் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையாளர் அச்சல்குமார் ஜோதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் தேதியும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையாளர் அச்சல்குமார் மேலும் கூறினார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply