இத்தாலி டென்னிஸ் வீரர் பாபியோ போக்னினி (Fabio Fognini ) மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கிவிட்டதாக கிராண்ட் ஸ்லாம் வாரியம் அறிவித்துள்ளது.
பாபியோ போக்னினி அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் போது பெண் நடுவரை அவமதிக்கும் வகையில் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதனால் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார். மேலும் அவருக்கு இரண்டு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டதுடன் 96 ஆயிரம் டொலர் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவர் மீது போடப்பட்ட தடையை தற்காலிகமாக நீக்கியதுடன், அபராதத்தையும் 47 டாலராக குறைத்து அறிவித்துள்ளது. மேலும் இது போன்ற தவறு செய்தால் மீண்டும் தடை விதிக்கப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
Add Comment