இந்தியா பிரதான செய்திகள்

91-வது நாளாக, டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை தொடர்கின்றனர்..

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லியில் நடந்து வரும் தமிழக விவசாயிகளின் போராட்டம் இன்று 91-வது நாளை எட்டியுயுள்ளது. தொடர்ந்து பல நாட்கள் போராட்டம் நடத்தியும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை எனக் கூறி வருத்தம் தெரிவித்த விவசாயிகள் அதனை போராட்டத்தில் வெளிப்படுத்தியுள்ளனர்.

நேற்றைய தினம் பிரதமர் மோடி வேடம் அணிந்த ஒருவர் நாற்காலியில் அமர்ந்திருக்க, அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் அவரது காலை வணங்கி மண்டியிட்டனர். இதேபோல் பன்னாட்டு நிறுவன உரிமையாளர் என்ற பெயர்ப்பலகையை கழுத்தில் தொங்கவிட்ட ஒருவர் உயரமான நாற்காலியில் அமர வைக்கப்பட்டிருந்தார்.

இந்த வகையில்   பிரதமர் மோடி பன்னாட்டு நிறுவனங்களை ஆதரித்து, விவசாயிகளை புறக்கணிப்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்த போராட்டம் அமைந்தது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.