இலங்கை பிரதான செய்திகள்

ஹர்த்தால் எவ்வித பயனையும் வழங்காது, எதுவாக இருந்தாலும் பேசுவோம்:-

குளோபல் தமிழ்ச் ெய்தியாளர்:-
ஹர்த்தால் மூலம் எவ்வித நன்மையும் ஏற்பட்டுவிடாது  கடைகளை மூடி ஹர்த்தால் நடத்தினால் பாதிக்கப்படுவது ஏழை மக்களே எனவே எந்தப் பிரச்சினைகளாக இருந்தாலும் பேசி தீர்த்துக்கொள்வோம் என ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளாா்.
கிளிநொச்சி அம்பாள்குளம் பிரதேசத்தில்  அமைக்கப்பட்ட  விசேட பொருளாதார மத்திய நிலையத்தை இன்று (14) திறந்து வைத்து உரையாற்றும் போது அவா் இவ்வாறு தெரிவித்தாா்
 அவா் தொடர்ந்தும் உரையாற்றுகையில்
நாட்டில் வடக்கு தெற்கு என்ற எந்தப் பிரச்சினையும் எமக்கில்லை. வடக்கில் உள்ள மக்களில் நூற்றுக்கு என்பது வீதமான மக்கள் என்னை ஜனாதிபதியாக்க வாக்களித்தீர்கள். அதை நான் ஒரு நாளும் மறக்க மாட்டேன் என் மீது நம்பிக்கை வைத்து சுதந்திரமாக வாழ்வதற்கும்  கஸ்ரம், பயயம், மீண்டும் யுத்தம் இடம்பெறாமல் இருப்பதற்குமே எனக்கு வாக்களித்தீர்கள்
நானும் பிரதமரும் எங்களுடைய அரசாங்கமும் மீண்டும் நாட்டில் ஒரு யுத்தம் ஏற்படாமல் இருக்கும் வகையிலேயே செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். எனவே நாம் எல்லோரும் ஒன்று பட்டு பணியாற்ற வேண்டும் எங்களுக்கு அரசியல் கட்சி பேதங்கள் தேவையில்லை மொழி மத வேறுபாடுகளும் தேவையில்லை நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயற்படுவோம் எனத் தெரிவித்த ஜனாதிபதி
வடக்கில் நேற்று(13) ஹர்த்தால் கடைப்பிடிக்கப்பட்டது. இன்று(14) போராட்டம் நடத்தப்பட்டது. இதனை கருத்தில் எடுத்த சிலர் என்னை யாழ்ப்பாணம் வரவேண்டாம் என்று சொன்னார்கள் ஆனால் என்னப் பிரச்சினை வந்தாலும் பரவாயில்லை நான் யாழ்ப்பாணத்திற்கும் வந்தேன் கிளிநொச்சிக்கும் வந்தேன் உங்கள் மீது நம்பிக்கை வைத்தே நான்   வடக்கிற்கு வந்தேன்.
எவருக்கும்  ஆர்ப்பாட்டமோ போராட்டமோ நடத்த முடியும் அதுவொரு ஜனநாயக உரிமை.  அவ்வாறு செய்யும் போது மக்களுக்கு எவ்வித கஸ்ரங்களும் ஏற்படாத வகையில் அதனை அவர்கள் செய்ய வேண்டும். கடைகளை மூடி ஹர்த்தால் செய்தால் அதனால் ஏற்படும் நட்டம் இந்த ஏழை மக்களுக்கே ஹர்தால் மூலம் எவ்வித பயனும் ஏற்பட்டுவிடாது.எனவே வடக்காக இருக்கலாம் தெற்காக இருக்கலாம் எந்தப் பிரச்சினை என்றாலும் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அந்தப் பிரச்சினைகளுக்கு அவர்கள் தீர்வு காண வேண்டும்.
நான் இன்று காலை யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களுக்கு சொன்னது போல இங்கும் சொல்கிறேன் எந்தப் பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டுகொள்ளவேண்டும். அப்பாவி ஏழை மக்களுக்கு எவ்வித கஸ்ரங்களும் வரக் கூடியவகையில் நாங்கள் எவ்வித செயற்பாடுகளையும் செய்யக் கூடாது.
இன்று காலை யாழ்ப்பாணத்தில் இரண்டாவது நிகழ்வுக்கு சென்ற போது ஒரு சிலர் கையில் கறுப்புக்கொடிகளை ஏந்தியிருந்தார்கள் நான் காரில் இருந்து இறங்கி அவர்கள் இருக்கும் இடத்திற்குச் சென்றேன்  அவர்கள் எனக்கு எதிர்ப்பை காட்டினார்கள் நான் அவர்களிடம் கூறினேன் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் பேசி தீர்த்துக்கொள்வோம் என்றேன்.
அத்தோடு மொழி மதம் என்பன எங்களுக்கு ஒரு தடையாக இருக்க கூடாது. தமிழ் சிங்களம் ஆங்கிலம் ஹிந்தி  போன்ற மொழிகளில் தமிழ்மொழி சிறந்த  ஒரு மொழியாக  அன்றும் இன்றும் விளங்குகிறது. தமிழ் சிங்கள மொழிகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமைவாய்ந்த மொழிகள் . மொழி மக்களை பிரிப்பதற்காக அல்ல  மக்களை சேர்ப்பதற்காகதான் இருக்கவேண்டும் மக்களை ஒன்று சேர்க்கின்ற பாலமாகதான் மொழி இருக்க வேண்டும் ஆனால் சிலர் மொழியை பயன்படுத்தி மக்களை பிரிக்க பார்க்கின்றார்கள் எல்லா மதங்களிலும் ஒன்றுபடுங்கள், ஒன்றுபடுகங்கள் என்றுதான் சொல்லப்படுகிறது எனவே மொழியின் காரணமாக நாங்கள் வேறுபட கூடாது மத்தின் பேரிலும் இரு கூறுகளாக இருக்க கூடாது அப்படி பிரிந்தால் அது முன்னேற்றம் அடைந்த ஒரு சமூகத்தின் இலட்சனம்  அல்ல முன்னேற்றம் அடையாத ஒரு சமூகத்தின் இலட்சனமாகவே அது இருக்கும்
நாட்டில் நல்லதொரு பொருளாதாரத்தை கட்டியெழுப்பவேண்டும் ஏழ்மையிலிருந்து விடுபட வேண்டும் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை பெற்றுக்கொடுக்க வேண்டும் கல்வி கற்ற நல்ல சமூகத்தை எதிர்காலத்திற்காக உருவாக்க வேண்டும்.  ஏழ்மைக்காக பிள்ளைகளின் கல்வியை நிறுத்தி விடாதீர்கள்  அப்படி ஏழ்மை காரணமாக பிள்ளைகளை பாடசாலைக்கு எவராவது அனுப்பாது விட்டால் அவ்வாறானவர்களை  பிரதேச செயலாளர்கள்  அரசாங்க அதிபர்கள்  பிரதேச அரசியல்வாதிகள் இனம் கண்டு எங்களுக்கு அறியத்தாருங்கள் நாங்கள் அவர்களுக்கு உதவிகளை மேற்கொள்வோம்.எனத் தெரிவித்த ஜனாதிபதி
எனக்கு நேரம் இல்லை இருந்தால் கிராமம் கிராமாக நான் நேரில் வந்து மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்துகொள்வேன்  தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றி கிராமங்களுக்கு வந்து தெரிந்துகொள்வதற்க நான் விருப்பமாக உள்ளேன்  மக்களின் பிரச்சினைகளை சரியாக இனம் கணடு அதனை தீர்த்து வைப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் எனவும் குறிப்பிட்டாா்

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.