இலங்கை பிரதான செய்திகள்

வடமாகாணசபை உறுப்பினர்கள் , அதிகாரிகளுக்கு செயலமர்வு :


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடமாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான அறிவூட்டல் செயலமர்வு கடந்த வாரம் இந்திய தலைநகர் புதுடில்லியில் அமைந்துள்ள ஓபி ஜிந்தால் குளோபல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இதில் மாகாணசபை ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், எதிர்கட்சி தலைவர் சி. தவராசா மற்றும் வடமாகாண பிரதம செயலாளர் பத்திநாதன், ஆளுநரின் செயலர் இளங்கோவன் உட்பட மேலும் பல அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இலங்கையின் இனப்பிரச்சினை ஆரம்பமான முதல் தற்போதுவரை இலங்கை அரசியலில் அவதானிப்புக்களை செய்துவரும் மிகவும் பிரபல்யம் வாய்ந்த விரிவுரையாளர்கள், புத்திஜீவிகள், அரசியல் ஆய்வாளர்கள் ஒருவாரமாக இந்த அறிவூட்டும் வேலைத்திட்டத்தில் கலந்து கொண்டனர்.

இனசமத்துவம், அதிகாரங்களை பகிரிந்து கொள்ளுதல், சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்திக் கொள்ளுதல், தேசிய பாதுகாப்பு. விசேடமாக இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியாவின் தலையீடுகள் தற்போதய பிரச்சினையினை தீர்ப்பதற்கு வடமாகாணசபை ஆற்றவேண்டிய முக்கிய பணிகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

மூத்த பத்திரிக்கையாளர் எம்.கே.நாராயணசாமி, இலங்கைக்கான முன்னாள் தூதுவர் நிருபமாராவ், கலாநிதி சி.ராஜ்குமார், கலாநிதி ஆர்.சுதர்சன், கலாநிதி எம்.சுதர்சனா நாச்சியப்பன், கலாநிதி மோகன்குமார், மேலும் பல விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply