இலங்கை பிரதான செய்திகள்

தற்போதைய அரசியல் சாசனத்தை பதிலீடு செய்ய மக்கள் ஆணை வழங்கவில்லை – மஹிந்த ராஜபக்ஸ

 
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தற்போதைய அரசியல் சாசனத்தை பதிலீடு செய்வதற்கு மக்கள் ஆணை வங்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஊடக அறிக்கை ஒன்றின் மூலமாக அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய அரசியல் சாசனத்தை திருத்தி அமைக்கவோ அல்லது பதிலீடு செய்யவோ மக்கள் ஆணை வழங்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் முறையில் மாற்றம் செய்தல் மற்றும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்தல் ஆகியனவற்றுக்கு மட்டுமே இந்த அரசாங்கம் முக்கியத்துவம் அளித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். அழிவை ஏற்படுத்தக்கூடிய புதிய அரசியல் சாசனத்தை நிறுத்த வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.